/indian-express-tamil/media/media_files/2025/04/13/nJcWz8U4rK7eHef2SdtE.jpg)
பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் தனது தந்தையை கொன்றவரை பழிதீர்க்கும் நோக்கில் நடந்த முதல் கொலையில் வரிச்சியூர் செல்வம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர், கூட்டாளி செந்தில் குமாரை தீர்த்துக்கட்டி தாமிரபரணி ஆற்றில் வீசிய கூறப்படும் சம்பவம் இரண்டாவது கொலையாக அமைந்தது. இவ்வாறு தொடங்கி, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட செல்வம், பின்னர் கொலை சம்பவங்களில் இருந்து விலகி, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு 56 முறை சிறை சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து மதுரையில் பிரபல ரவுடியாக மாறிய வரிச்சியூர் செல்வம், தற்போது “நடமாடும் நகைக்கடை” போல வலம் வருபவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். சமீபத்தில் ஒரு கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு கோவை மாநகரில் கட்டப்பஞ்சாயத்து செய்ய ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தாக கூறப்பட்டது.
இந்தநிலையில், தலைமறைவாக இருந்த வரிச்சியூர் செல்வம், காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வம் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து திண்டுக்கல் மற்றும் மதுரை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.