மன்னார்குடி சுற்றுச்சாலைக்கு வாத்தி குளத்தை அபகரிப்பதா? - பி.ஆர். பாண்டியன் கண்டனம்

ஜெயரஞ்சன் கூற்றுப்படி காவிரி டெல்டாவில் ஏதாவது ஒரு கிராமத்தில் விளைநிலங்களை விட்டு விவசாயிகள் குடிபெயர்ந்து வெளியேறி இருப்பதாக நிரூபிக்க முடியுமா? – பி.ஆர் பாண்டியன் கேள்வி

ஜெயரஞ்சன் கூற்றுப்படி காவிரி டெல்டாவில் ஏதாவது ஒரு கிராமத்தில் விளைநிலங்களை விட்டு விவசாயிகள் குடிபெயர்ந்து வெளியேறி இருப்பதாக நிரூபிக்க முடியுமா? – பி.ஆர் பாண்டியன் கேள்வி

author-image
WebDesk
New Update
pr pandian mannargudi ring road

மன்னார்குடி நகரத்திற்கு சுற்றுச்சாலை அமைக்கும் பணி 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சாலை அமைப்பதற்காக மேலமறவாக்காட்டில் வாத்தி குளத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேரில் பார்வையிட்டார்.

Advertisment

பின் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது: “தமிழ்நாட்டில் சுற்றுச்சாலை அமைக்கிறோம் என்ற பெயரால் நீர் ஆதாரங்களை அபகரிப்பதை அனுமதிக்க முடியாது. சுற்றுசாலை அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. ஆனால் மேலமறவாக்காட்டில் ஊராட்சிக்கு சொந்தமான வாத்திகுளத்தை அபகரித்து சாலை அமைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இக்குளத்தை மன்னார்குடி நகர மக்கள் கஜா புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இக்குளத்திற்கு நேரடியாக கட்டேரி வாய்க்காலில் இருந்து பாசனம் உள்ளது. கழிவுநீர் கலப்பதற்கு வாய்ப்பு இல்லாத வகையில் இக்குளம் இயற்கையாக அமைந்துள்ளது. குளத்தில் தெற்கு ஓரத்தில் சாலை அமைக்கப்படுமேயானால் குளம் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்திருக்கும். முன்கூட்டியே திட்டமிடாத வகையில் தன் விருப்பத்திற்கு குளத்தை அபகரித்து மூன்று பிரிவுகளாக குளத்தை பங்கிட்டு சாலை அமைப்பதை அனுமதிக்க முடியாது.

Advertisment
Advertisements

தமிழகத்தில் கிராமப்புறத்தில் விவசாயிகள், இளைஞர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி வருவதாகவும், வேலை வாய்ப்பு இல்லாமல் பரிதவிப்பதாகவும், எனவே தொழில் பொருளாதரத்தை உயர்த்துவதற்கான தேவை வந்துள்ளதாகவும், மறைமுகமாக விவசாயத்தை அழிக்கும் நோக்கோடு தமிழக அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அளித்துள்ள அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தனக்கு கொடுத்த பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக தன் முகவரியையே மாற்றிக் கொண்டுள்ளார். வேளாண் வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்காமல், நீராதார திட்டங்களை மேம்படுத்தாமல் அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யாமல் தமிழக அரசு வேளாண்மையை திட்டமிட்டு புறக்கணித்து வருகிறது. விவசாயத்தை நஷ்டமான தொழில் என விளம்பரப்படுத்தி விளைநிலங்களை கார்ப்பரேட்டுகள் அபகரித்துக் கொள்வதற்கு வழிவகை செய்யும் நோக்கோடு அறிக்கை அமைந்துள்ளது.

காவிரி டெல்டாவில் 90 சதவீத நிலப்பரப்பும், பாசன கட்டமைப்பும் தொடர்ந்து விவசாயிகளால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உழவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு 90 சதவீத விவசாயிகள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெயரஞ்சன் கூற்றுப்படி காவிரி டெல்டாவில் ஏதாவது ஒரு கிராமத்தில் விளைநிலங்களை விட்டு விவசாயிகள் குடிபெயர்ந்து வெளியேறி இருப்பதாக நிரூபிக்க முடியுமா?  

தமிழகத்தில் வேளாண்மைக்கு ஆணையம் அமைத்து வேளாண் விளைபொருளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்வதற்கான திட்டங்களை உருவாக்குவதற்கு போராடி வருகிறோம். மாறாக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் அமைக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசு துணை போகிறது.

நான்காண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி குறித்து புள்ளி விவரத்தை ஜெயரஞ்சன் வெளியிட தயாரா? உணவு உற்பத்தி பெருக்கம் குறித்து புள்ளி விவரங்களை வெளியிட தயாரா? விளை நிலங்களை சிப்காட் ஆக மாற்றுவதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலபரப்பின் புள்ளி விவரங்களை வெளியிட தயாரா? எனவே உண்மைகளை மூடி மறைத்து வேளாண்மையை அழிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக விவசாயிகள் அனுமதிக்க மாட்டோம். இதேநிலை தொடருமேயானால் தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரிக்கிறேன்,” என்றார்.

இந்தச் சந்திப்பின்போது மாநில துணைச் செயலாளர் எம் செந்தில்குமார், வேலமரவக்காடு  இராமதுரை. சிவசுப்பிரமணியன், சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

க.சண்முகவடிவேல்

Mannargudi PR Pandian

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: