Advertisment

சிப்காட் எதிர்ப்பு: அமைச்சர் வேலுவை பதவி நீக்கக் கோரி விவசாய அமைப்புகள் போர்க்கொடி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

author-image
WebDesk
New Update
Farmers protest

தமிழ்நாடு அணைத்து விவசாய சங்கங்களின் போராட்டக்குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Tamil Nadu farmer unions to stage statewide protest against SIPCOT project, call for minister Velu’s removal

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மா பகுதியில், மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியதால், கைது செய்யப்பட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர், செவ்வாய்க்கிழமை மாநிலம் தழுவிய போராட்டம் அறிவித்துள்ளனர். நவம்பர் 29-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்த உள்ளனர்.

தமிழ்நாடு அணைத்து விவசாய சங்கங்களின் போராட்டக்குழு (அனைத்து போராட்டம் நடத்தும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு) 100 விவசாயிகள் அமைப்புகளின் கூட்டத்தை திருச்சியில் சனிக்கிழமை நடத்தியது.

செய்யாறு அருகே மேல்மா-சிப்காட் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அதில், உழவர் உரிமை இயக்க விவசாயி தலைவர் அருள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பிரச்னையில் வேறு  மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவது தவறு என்று கூறிய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்ததற்காக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தொழிற்சாலைகள் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அனைத்து திட்டங்களையும் அரசு கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தின. செய்யாறில் சிப்காட் மூன்றாம் கட்ட திட்டத்திற்காக 3,174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக மேல்மா மற்றும் எட்டு பக்கத்து கிராமங்களின் விவசாயிகள் 120 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.

அரசாங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் முந்தைய இரண்டு திட்டங்களின் போது இருந்ததைப் போலவே, இந்தத் திட்டம் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது, மொத்த நிலத்தில் ஏழு ஏக்கர் மட்டுமே நன்செய் நிலங்கள் என்று அரசாங்கம் கூறியது. 1,881 நில உரிமையாளர்களைப் பற்றி அரசாங்கம் கூறியது, 239 பேர் மட்டுமே நிலம் கையகப்படுத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர், மேலும், இது அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்காக ஒரு சிலரின் தூண்டுதலால் ஏற்பட்டது என்று அரசுத் தரப்பில் கூறியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் அடிப்படையில், நவம்பர் 4-ம் தேதி 20 போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 7 விவசாயிகள் மீது, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்து, விவசாயிகளின் அடிப்படை உரிமைகளை நசுக்க அரசு முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினர்.

இதைத் தொடர்ந்து, அருள் தவிர 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

விவசாயிகளை அரசு விடுவிக்கக் கோரி, தொடக்கத்திலிருந்தே இந்த விவகாரத்தில் முன்னணியில் இருந்து வரும், அறப்போர் இயக்கம் நவம்பர் 19-ம் தேதி ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில், ஒரு வயதான முதியவர் அரசு அதிகாரிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறார். 



திருவண்ணாமலையில் விவசாய நிலம் கையகப்படுத்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அருளின் தூண்டுதலே போராட்டத்துக்கான காரணம் என்று கூறிய அரசு அதிகாரிகளின் குற்றச்சாட்டை மறுக்கும் முதியவர் ஒருவரின் வீடியோவை நவம்பர் 19-ம் தேதி வெளியிட்டது.  அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட ஏழு விவசாயிகளில் ஒருவரான தேவனின் தந்தை என்று கூறிக்கொள்ளும் அவர், ஆளும் கட்சியான தி.மு.க நிர்வாகிகளால் செய்யாறுக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கே, அருள் போராட்டத்தைத் தூண்டியதாகவும் கூற வற்புறுத்தினர் என்று கூறினார். இருப்பினும், அது உண்மையல்ல, அவருடைய மகன் தனது சொந்த விருப்பத்தின் பேரில் போராட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட விவசாயி அருளின் உறவினரான ஆர். சௌந்தர், விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடும் அருள் உழவர் உரிமை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு கிருஷ்ணகிரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்று குறிப்பிட்டார்.

“அருள் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஓசூரில் இருக்கிறார். ஆனால், அவருக்கு திருவண்ணாமலையில் விவசாய நிலம் உள்ளது. எனவே, அவருக்கு இங்கே எந்த பங்கு இல்லை என்பது உண்மையல்ல. இரண்டாவதாக, எட்டு வழிச் சாலைத் திட்டத்தில் அவர் பங்கேற்றதால், தேத்துரை, நெடுங்கல் விவசாயிகள், மேல்மா-சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போரட்டத்துக்கு அவரை அணுகினர். அதனால், அவர் போராட்டத்தில் பங்கேற்றார்” என்று சௌதர் indianexpress.com இடம் கூறினார்

மேலும், “அரசாங்கம் கூறுவது போல் இங்கு தூண்டுதல் எதுவும் இல்லை. அமைச்சர் எ.வ. வேலுவுக்கு அருள் மீது தனிப்பட்ட வெறுப்பு உள்ளது. அரசின் அறிக்கை நாடகமேயன்றி வேறில்லை. நாங்கள் அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம்; அருள் பிரச்சினையைத் தூண்டவில்லை என்பதை நிரூபிக்க அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் வழங்குவோம்” என்று சௌந்தர் மேலும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Farmers Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment