பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் போல் மத்திய அமைச்சர் பார்க்கிறார்: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

"உணவுத்துறை அமைச்சர் பீயூஸ்கோயல், தேசம் தழுவிய விவசாயிகள் போராட்டத்தை ஏதோ பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் என்பது போல குறுகிய மனப்பான்மையோடு அணுகும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள்" என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

author-image
WebDesk
New Update
Farmers association leader PR Pandian on meeting with Piyush Goyal Pralhad Joshi Tamil News

"உணவுத்துறை அமைச்சர் பீயூஸ்கோயல், தேசம் தழுவிய விவசாயிகள் போராட்டத்தை ஏதோ பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் என்பது போல குறுகிய மனப்பான்மையோடு அணுகும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள்" என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

பஞ்சாப் மாநில தலைநகர் சண்டீகரில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணைய சட்டம் குறித்து 3-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று  காலை11.30 மணிக்கு துவங்கிய கூட்டம் மாலை 3.30 மணி வரையிலும் நடைப்பெற்றது. மத்திய அமைச்சர்கள் சிவராஜ்சிங் சவுகான், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி, மத்திய அரசு உயரதிகாரிகள் மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 

Advertisment

ஐக்கிய கிசான் மோர்ச்சா (SKM - NP) சார்பில் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங்டல் லேவால், தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், கிசான் மஸ்தூர் மோர்ச்சா (KMM) சார்பில் சர்வன் பாந்தர் கேரளா ஜான், உத்தர பிரதேசம் பெலாரி உள்ளிட் முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டம் முடிந்தபின் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 

மத்திய அரசு விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கும் மனம் இல்லாமல் உள்ளனர். பேச்சுவார்த்தை என்ற பேரில் விவசாயிகள் போராட்டத்தின் ஒற்றுமையை சீர்குழைக்கும் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். 

Advertisment
Advertisements

குறிப்பாக, உணவுத்துறை அமைச்சர் பீயூஸ்கோயல் குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பதற்கு தடையாக உள்ளார். தேசம் தழுவிய விவசாயிகள் போராட்டத்தை ஏதோ பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் என்பது போல குறுகிய மனப்பான்மையோடு அணுகும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். 

பேச்சுவார்த்தையை டெல்லியில் நடத்த மறுக்கிறார்கள். விவசாயிகள் போராட்டத்திற்கு தேசம் தழுவிய அளவில் தீர்வு காணும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலை நிரந்தர சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற மறுத்து பஞ்சாப் மாநிலத்திற்கு மட்டும் கொடுத்து விடலாம் என்ற உள்நோக்கோடு அம்மாநில அரசை முன்னிலைப்படுத்தி செயல்படுகிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

செய்தி: க.சண்முகவடிவேல்.

PR Pandian

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: