காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்துறை சார்பாக விவசாயிகள் குறை தீர்ப்பு முகாம் இன்று (23.06.2023) காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் துணை ஆட்சியர் (பயிற்சி) சம்யக் S. ஜெயின் கூடுதல் வேளான் இயக்குநர் செந்தில்குமார், விவசாய சங்கத்தினர் மற்றும பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், “வெள்ள நிவாரணம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளோம் அதுவும் கிடைக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் பருத்திக்கு அரசு விலை உயர்த்தி தர நடவடிக்கை வேண்டும். கூட்டுறவு கடனை விவசாயிகளுக்கு அளிக்க அரசு முன்வர வேண்டும்.
நிலுவையில் உள்ள 437 பேருக்கான இன்சூரன்ஸ் தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்ற முறை வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பெரும்பாலும் பல்வேறு இடங்களில் பன்றிகள் பிடிக்கப்பட்டுள்ளன” என்றனர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“