/tamil-ie/media/media_files/uploads/2020/05/template-2020-05-04T153751.026.jpg)
pm kisan pm modi farmers pension scheme, pm kisan tamil news, pm kisan latest tamil news, pm kisan news in tamil, பிரதமர் மோடி விவசாயிகள் திட்டம், பிரதான் மந்திரி கிசான் மந்தான் யோஜனா
Farmers free power row: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சிகள், முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
இன்று (18.5.2020) தலைமைச் செயலகத்தில், திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் ரூ.336.96 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினேன்.
விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்ய கூடாது என்றும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கும் முடிவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ள விட வேண்டும் என்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளேன்.
இன்று (18.5.2020) தலைமைச் செயலகத்தில், "காவேரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு" குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவேரி டெல்டா பகுதி விவசாயப் பெருங்குடி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மேட்டூர் அணையிலிருந்து குறுவை நெல் சாகுபடிக்காக வருகின்ற ஜூன் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு காவேரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன்.
பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில், முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.