மத்திய அரசின் சார்பில் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான விலை நிர்ணயக்குழு கூட்டம் அதன் தலைவர் விஜய்பால்சர்மா தலைமையில் டெல்லி கிருஷி பவனில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் அதன் தலைவர் பிஆர்.பாண்டியன் பங்கேற்று வேளாண் விலை நிர்ணயம் செய்வது குறித்து விளக்க கோரிக்கை மனுவினை நேரில் வழங்கினார்.
பின்னர், இந்திய அரசின் வேளாண்மை துறை சார்பில் நடத்தப்படுகிற விலை நிர்ணய குழு கூட்டத்தில் விவசாயிகளை பாதுகாக்க கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கைகள் பின்வருமாறு;
1) லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை (PMSP)
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்குஉற்பத்தி செலவை கணக்கில் கொண்டு சிலவில் 50 சதவீதத்தை கூடுதலாக உயர்த்தி லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும்.
2) நெல்,கோதுமை ஏற்றுமதி இறக்குமதிகொள்கை இந்திய விவசாயிகள் உற்பத்தி பாதிக்காமல் முடிவு எடுத்திடுக.
வேளாண் உற்பத்தி மிகைக்காலத்தில் அரிசி கோதுமை சர்க்கரை, உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஏற்றுமதிக்கு தடை விதிப்பதும், இறக்குமதிக்கு சலுகை அளித்து ஊக்கப்படுத்துவது ஏற்கதக்கதல்ல. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உலகப் பெரும் முதலாளிகள் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து இந்திய கிடங்குகளில் பதுக்கி வைத்து விடுகின்றனர். அப்பொருள்களுக்கு விவசாயிகள் பெயரில் வங்கிகளில் சலுகைகளுடன் கடன்களைப் பெற்று வருகின்றனர். அவ்வாறு பதுக்கப்படும் உணவுப் பொருட்கள் உற்பத்தி குறைவு காலத்தில் வெளிச் சந்தையில் செயற்கையான போட்டியை உருவாக்கி பல மடங்கு விலையை உயர்த்தி விற்கின்றனர். தான் விரும்பும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வருகின்றனர். இதனால் உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பது தடுக்கப்படுவதோடு,உரிய சந்தை வாய்ப்புகளும் மறுக்கப்படுகிறது. எனவே மிகை உற்பத்தி காலத்தில் ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதை கைவிட்டு தேவையான பொருட்களை மட்டும் இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். உலகளாவிய சந்தையில் போட்டி போட்டு விற்கும் நிலையை விவசாயிகளுக்கு ஏற்படுத்திட வேண்டும்.
3) பருத்தி, தேங்காய் விலை வீழ்ச்சிக்கு தீர்வு கண்டிடுக.
பருத்தி.தேங்காய் உள்ளிட்ட வேளாண் உற்பத்தி பொருட்கள் மிகப்பெரும் மிகப்பெரும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பருத்தி கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் ரூ 5முதல் 6 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் ஆகிறது.
அ) இந்தியாவில் பருத்தி மிகை உற்பத்தி காலத்தில் இறக்குமதிக்கு வரிச்சலுகை அளித்து ஊக்கப்படுத்துவதை கைவிட வேண்டும். மத்திய அரசு நிர்ணயத்துள்ள விலைக்கு குறைவில்லாமல் கொள்முதல் செய்வதை உறுதி செய்திட வேண்டும்.
ஆ) தேங்காய் மருத்துவ குணம் கொண்ட உணவு பொருளாகும். இதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்டு உணவு பொருட்களாக உற்பத்தி செய்திட வேண்டும்.தேங்காய் எண்ணெய் உடல் நலத்தை பாதுகாக்கும் வலிமை கொண்டது. தோல் நோய்,வயிறு புண் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்க வல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூளை பலம் பெறுவதற்கான வாய்ப்பு கொண்டது. எனவே இந்திய பொதுச் சந்தையில் உடல் நலத்தை கெடுக்கக்கூடிய பாமாயில். சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்திட வேண்டும். அதற்கு மாற்றாக பொது விநியோகத் திட்டத்திலும், மருத்துவமனைகள். ஊட்டச்சத்து மையங்கள் பொதுச்சந்தைகளிலும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதை ஊக்கப்படுத்திட வேண்டும். இப்பொருட்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வதை தடுத்து நிறுத்திட வேண்டும்.
அதற்கான வகையில் தொழிற்சாலைகளை உருவாக்கிட அரசு முன்வர வேண்டும்.
4) செறிவூட்டப்பட்ட அரிசி பொது விநியோக திட்டத்தில் விற்பனை செய்வதை கைவிடுக.
இந்திய அரசு 2023 ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவித்துவிட்டு செயற்கை முறையில் உலக பெரும் முதலாளிகள் லாபம் பெறும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியை பொது விநியோக திட்டத்தில் விற்பனை செய்வதை இந்திய அரசு கைவிட வேண்டும்.சிறு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதனை லாபகரமான விலையில் சந்தைப்படுத்துவதற்கான உத்தரவாதத்தை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். சிறு தானிய உணவு வகைகள் தான் மனிதர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் தன்மை கொண்டது. குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணவாகவும் சத்துக் குறைபாடுகளை போக்கும் இயற்கையான உணவு வகைகளாக அமைந்துள்ளது.
5) உரவிலை, தட்டுபாட்டை போக்கிட உரமான்யம் விவசாயிகளுக்கு நேரடியாக சென்றடைவதை உறுதிப்படுத்திடுக..
உலகளாவிய சந்தையில் உரத்திற்கான மூலப் பொருட்கள் விலை உயர்வை காரணம் காட்டி இந்திய சந்தையில் பல மடங்கு விலையை உயர்த்தி கொள்ளை லாபம் அடித்து வருகிறார்கள். நடப்பாண்டு இந்திய அரசு 1.25 லட்சம் கோடியை உரத்திற்கான மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் மானியம் முழுமையும் விவசாயிகள் பயன்பெற முடியவில்லை. குறிப்பாக உரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இதனை விவசாயிகள் என்கிற பெயரில் மாற்றுத்திட்டங்களுக்கு பயன்படுத்துவதாலும் தவறான முறையில் சந்தைப்படுத்துவதாலும் விவசாயிகள் விலை உயர்வை எதிர் கொள்ள முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இதிலிருந்து பாதுகாக்க உரத்திற்கான மானியம் விவசாயிகளுக்கு நேரடியாக சென்றடைவதை மத்திய அரசு வெளிப்படைத்தன்மையோடு உறுதிப்படுத்த முன் வர வேண்டும். இதன் மூலம் உரத்தட்டுப்பாட்டையும். விலை உயர்வையும் போக்கி விவசாயிகள் பயன்பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
6)விவசாயிகள் உள்நாட்டு வணிகர்கள் சிறு குறுந் தொழில் முதலீட்டாளர் உள்ளடக்கிய உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கிடுங்க இந்தியாவில் விவசாயத்தை நேரடியாக 80 சதவீத மக்களும் மறைமுகமாக 15 சதவீத மக்களும் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களை உலகளாவிய சந்தையில் லாபகரமான விலையில் விற்பனை செய்வதற்கும் இந்திய சந்தையில் பதுக்கல் காரர்களுக்கு இடம் இன்றி லாபகரமான விலையில் சந்தைப்படுத்துவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் முன்வர வேண்டும். குறிப்பாக உற்பத்தியில் வணிகர்களும் சிறு குழு தொழில் முதலீட்டாளர்களும் பங்கேற்கும் வகையில் விவசாயிகள் உள்நாட்டு வணிகர்கள் ஏற்றுமதியாளர்கள் சிறு குறு தொழில் முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய உற்பத்தியாளர் குழுக்களை கிராமங்கள் தோறும் உருவாக்கிய வேண்டும் அதன் மூலம் சந்தைப்படுத்துவதையும் தேவைக்கேற்ப ஏற்றுமதி செய்வதையும் இடைத்தரகர்கள் இன்றி நடைபெற வழி காண வேண்டும்.
7) மாநிலங்களின் பருவநிலைக்கு ஏற்ப கொள்முதல் முறைகளை உருவாக்கிட அனுமதித்திடுக
இந்தியா முழுமையிலும் காரிப்,ரபி பருவத் கொள்முதல் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவ மழையை முழுமையாக பெறக்கூடிய மாநிலமாகும். பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரும் பேரழிவை சந்தித்து வரும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானதாக உள்ளது.
மத்திய அரசின் காரிப் ரபி பருவ கொள்முதல் முறைகள் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பருவ காலத்திற்கு ஏற்ப பொருத்தமானதாக இல்லை.இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பருவ கால கொள்முதல் கொள்கைகளை அந்தந்த மாநிலங்களின் தேவைக்கேற்ப கொள்கை நடைமுறைகளை வகுத்திட சிறப்பு அனுமதிகளை மத்திய அரசு வழங்கி கண்காணித்திட வேண்டும்.
8) நபார்டு வங்கி நிதி வேளாண் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நபார்டு வங்கி வேளாண் வளர்ச்சியை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட நிதி நிறுவனமாகும். ஒதுக்கப்படுகிற நிதி பெரும் பகுதியான அளவில் வேளாண்மை வளர்ச்சி என்கிற பெயரில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் அமைப்பதற்கும், பாலங்கள் கட்டுவதற்கும்,பள்ளி கல்லூரி, மருத்துவமனை, அலுவலக கட்டிட கட்டுமான பணிகளுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை கொடுத்து 70% நிதிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
வேளாண் மேம்பாட்டிற்காகவும், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தோடும் வேளாண் வளர்ச்சிக்கான வகையில் ஒதுக்கீடு செய்யப்படும் நபார்டு நிதியை வேளாண் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மாற்றுத்தட்டங்களுக்கு பயன்படுத்துவதை தடுத்து நிறுத்திட மத்திய அரசு முன் வர வேண்டும் என்றார்.
பாரதிய கிசான் யூனியன் சார்பில் ஹரியானா சுவாமி இந்தர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 50 க்கும் மேற்பட்ட பல்வேறு விவசாயிகள் சங்க தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.