/indian-express-tamil/media/media_files/2025/10/02/pr-pandian-hunger-protest-2-2025-10-02-16-54-28.jpg)
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமைமையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போரட்டம் மன்னார்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலம் கொள்கை நிலையை தெளிவுப்படுத வேண்டும் எனவும் இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிடுக என்றும் ஓ.என்.ஜி.சி இயந்திரங்களை டெல்டாவை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமைமையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போரட்டம் மன்னார்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“காவிரி டெல்டாவில் மன்னார்குடியை தலைமையிடமாக கொண்டு மீத்தேன் திட்டத்திற்கு 2011-ல் தமிழக அரசோடு ஒப்பந்தம் செய்தது. 2012-ல் ஜனவரி 28-ல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எதிரான போராட்டத்தை துவக்கினோம். 2013-ல் ஏப்ரல் 4-ல் பெரியகுடி ஹைட்ரோகார்பன் எரிவாயு கிணறு வெடித்து சிதறியது. இதனையடுத்து விக்கிரப்பாண்டியம், இருள்நீக்கி, மாவட்டக்குடி, ஆதிவிடங்கன் பள்ளிவர்த்தியில் சட்டவிரோதமாக 8 இடங்களில் கிணறு அமைத்து வாயு அடர்த்தியை குறைத்த முற்பட்டது. இதனை எதிர்த்து 2015-ல் தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து ஒட்டு மொத்தமாக ஓன்ஜிசிக்கு தடை விதிக்கப்பட்டது.
மத்திய, மாநில அரசுகள் காவிரி டெல்டாவில் 2016 முதல் புதிய கிணறு அமைக்க அனுமதிக்க மாட்டோம். ஹைட்ரோகார்பன், மன்னார்குடிமீத்தேன்,பாறை எரிவாயு, ஷேல் வாயு, கச்சா உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை அனுதிக்க மாட்டோம் என கொள்கை முடிவை தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்தது.அனைவருக்கும் கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்தோடு போடப்பட்ட மீத்தேன் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இதனை ஏற்று தடையை நீக்கி டெல்டாவை பாதுகாத்திட உத்திரவிட்டது.
இதன் பிறகும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பணிகளை சட்டவிரோதமாக துவங்கியது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திட வலியுறுத்தி 2019-ல் டெல்லி பாராளுமன்றம் முன் உண்ணாவிரதம், முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அன்றைய புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி உட்பட 15-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் பங்கேற்றனர். அமமுகவும் பங்கேற்று ஆதரவளித்தனர். இதனையடுத்து மத்திய அரசின் ஒப்புதலோடு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 2020-ல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவித்து சுற்றுசூழல் துறை, வேளாண் துறை சார்பாக இரு அரசாணைகள் வெளியிட்டு ஓ.என்.ஜி.சி வெளியேற்றப்பட்டது.
2021-ல் தி.மு.க அரசு பொருப்பேற்ற உடனே நாகப்பட்டினத்தை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்தது இதற்கு எதிராக போராடினோம். முதலமைச்சரே அதனை திரும்ப பெறுவதாக அறிவித்து அரசாணைகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பெரியகுடி, திருவாரூர் ஹைட்ரோகார்பன் மன்னார்குடி மீத்தேன் உள்ளிட்ட பல்வேறு பேரழிவு திட்டங்கள் ஆய்வு முடிக்கப்பட்டு நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு தனது கொள்கை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். உடனடியாக ஓ.என்.ஜி.சி இயந்திரம் வெளியேற்ற வேண்டும். இஸ்மாயில் குழு அறிக்கையை உடன் வெளியிட வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாதுகாக்க முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக களமிறங்குவோம். தேர்தல் களத்தில் சந்திக்க எங்களோடு கரம்கோர்க்கும் அரசியல் கட்சிகளோடு இணைந்து டெல்டாவை பாதுகாக்க போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்” என்று பி.ஆர். பாண்டியன் கூறினார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில கவுரவ தலைவர் மதுரை எம். ராமர், தென் மண்டல தலைவர் சிவகங்கை கட்டிக்குளம் மாணிக்கவாசகம், தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் திருப்பதி வாண்டையார், மாநில அமைப்பு செயலாளர் எஸ். ஸ்ரீதர்,மாநிலத் துணைச் செயலாளர் எம் செந்தில்குமார், தஞ்சை மண்டல தலைவர் துரை. பாஸ்கரன், மாநில இளைஞரணி செயலாளர் பொ.மகேஸ்வரன், திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், மாவட்ட பொருளாளர் நன்னிலம் நடராஜன், மாவட்ட துணை தலைவர் எம் கோவிந்தராஜ், மாவட்ட துணை செயலாளர் பொ. முகேஷ், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் முருகன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பத்மநாபன், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் எஸ். பிரபாகரன், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் பி.கே. கோவிந்தராஜ், மன்னார்குடி நகர செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் பழனிராஜா உள்ளிட்ட அனைத்து ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.