சம்யுக்த்த கிசான் மோர்ச்சா அரசியல் சார்பற்ற அமைப்பின் சார்பில் உண்ணாவிரதத்தை சாகும் வரை 100வது நாளாக மேற்கொண்டுள்ள ஜக்ஜித் சிங் டல்லேவால் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பி.அய்யாக்கண்ணு தலைமையற்றார்.பி ஆர் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மத்திய அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. உண்ணாவிரதப் போராட்டத்தை 100 வது நாளாக தொடரும் ஜக்ஜித் சிங் டல்லேவால் உயிரை பாதுகாக்க மத்திய அரசு முன்வராதது வேதனையளிக்கிறது,
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை ஏற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு பேயரளவில் விவசாயிகளோடு கலந்துரையாடல் கூட்டங்களை மத்திய அமைச்சர்கள் குழு நடத்துகிறதே தவிர இதுவரையிலும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வருவதற்கோ, கடன் முழுவதும் தள்ளுபடி செய்வதற்கோ எந்த உத்தரவாதமும் அளிக்க முன்வரவில்லை. இதனால் ஏமாற்றம் அளிக்கிறது.
விவசாயிகளின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜக்ஜித் சிங் டல்வால் உயிரை பாதுகாப்பதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.
உடனடியாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை கொண்டு வந்து ஜக்ஜித் சிங் பல்லே வால் உயினர பாதுகாக்க வேண்டும். விவசாயிகளை தற்கொலையில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற நவாப் சிங் தலைமையிலான குழு 12 கோரிக்கைகளை உள்ளடக்கிய பரிந்துரையை உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கியது.அதனை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்து டல்லேவாளோடு பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுவரையிலும் இரண்டு முறை மத்திய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறதே தவிர நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு எந்த உத்தரவாதமும் வழங்க முன்வரவில்லை. மேலும் வரும்19ஆம் தேதி மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. அக்கூட்டத்தில் உடனடியாக மத்திய அரசு நீதிமன்ற பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். இல்லையேதமிழகத்தில் போராட்டத்தை தீவிர படுத்துவோம்.
இதனை வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரையிலும் மாநிலத்திற்கு ஓரிடத்தில் நூறு நாட்கள் உண்ணாவிரதத்தை அடையாளப்படுத்தும் விதத்தில் 100 விவசாயிகள் பங்கு கொள்ளுகிற உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறோம்.
தமிழக முதலமைச்சர் விவசாயிகளை பாதுகாக்க உச்ச நீதிமன்ற பரிந்துரையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். முதலமைச்சர் தமிழக விவசாயிஉணர்வாக மத்திய அரசுக்கு வேண்டுகோள் விட வேண்டும். தமிழ்நாட்டில் அரசு விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்களை தீவிரப் படுத்தி வருகிறது. அதனை கைவிடுவதற்கான அடுத்த கட்ட போராட்டத்தை தீவிர படுத்த உள்ளோம் என்றனர்.
இந்த அறப்போராட்டத்திற்கு திருப்பதி வாண்டையார்,
கே.எஸ். பாலு ஆகியோர் முன்னிலை வைத்தனர். கோவை மண்டல தலைவர் ஏ.எஸ். பாபு, பானுமதி, தென் மண்டல தலைவர் சிவகங்கை மாணிக்கவாசகம், தஞ்சை மண்டல தலைவர் துரை பாஸ்கரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சரவணன்,தலைவர் எம். சுப்பையன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், கடலூர் மாவட்ட செயலாளர் அன்பழகன், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் கமல்ராமன்,
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் பிரபாகரன், வடக்கு மாவட்ட தலைவர் நிழல்தாசன் மாநில இளைஞரணி செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன்,
புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் குரும்பூண்டி பத்மநாபன், மாவட்ட தலைவர் கரம்பக்குடி மகேந்திரன், ஏ.கே.ஆர். ரவிச்சந்திரன் உள்ளிட்ட 100 விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்