farmers loan agriculture loan waiver farmers : கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார். வேளாண் துறை தொடர்பாக பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்த முதலமைச்சர், விவசாயிகளுக்கு துயர் ஏற்படும் போது அம்மா அரசு உதவி வருகிறது என்று கூறினார்.
2019-2020 கொரோனா தொற்று காரணமாக பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுவதா முதலமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பு இப்போதே அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.
அந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடிக்கும் அதிகமான பயிர்க் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தார். கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
`உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து”
கொரோனா காலத்தில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட முதல்வர் திருக்குறளை மேற்கோள் காட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.