பி.ரஹ்மான் கோவை
19% ஈரப்பதம் வரை நெல் நேரடி கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோவை ஆனைமலை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் சுமார் 6500 ஏக்கர் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3500 ஏக்கர் நெல் நேரடி கொள்முதலிற்காக அறுவடை செய்யபட்டு வருகிறது. தற்போது மழை பொழிவு மற்றும் காற்றில் அதிக ஈரப்பதம் காரணமாக 17% வரை நெல் ஈரப்பதமாக இருக்கிறது.
இந்நிலையில் நெல் கொள்முதல் செய்வோர் 16% ஈரப்பதத்திற்கு காய வைத்துகொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளதால், சுமார் 3000 நெல் மூட்டைகள் களத்தில் இருப்பதாக கூறியுள்ள விவசாயிகள், தற்போது காற்றின் ஈரப்பதன் அதிகமாக இருப்பதால் நெல் ஈரப்பதாமாக இருப்பதாகும், இதனால் நெல் கொள்முதல் செய்யாமல் இருப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் நெல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் விதமாக 19% ஈரப்பத்திற்கு கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி கோவை ஆனைமலை பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நெல்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரை சந்துத்து மனு அளித்தனர்.
இது குறித்து ஆனைமலை பழைய ஆயக்கட்டு விவசாயிகள் சங்க தலைவர் பட்டீஸ்வரன் கூறுகையில்,
தற்போது ஆனைமலை பகுதியில் மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக 19% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும், இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“