கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டிட்கோ அமைப்பின் மூலம் தொழில்பேட்டை அமைக்கும் தமிழக அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அன்னூரில் இருந்து கோவை புலியகுளம் விநாயகர் கோவிலுக்கு நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
Advertisment
கோவை மாவட்டம் அன்னூர் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட குப்பனூர், வடக்கலூர், பொகளூர், இலுப்பந்த்தம், அக்கரை செங்கப்பள்ளி, பள்ளிபாளையம் ஆகிய 6 ஊராட்சிகளில் 3731 ஏக்கர் பரப்பளவில் டிட்கோ சார்பில் ஜவுளி பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
Advertisment
Advertisements
ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டங்களில் ஈடுபட்டு வந்த விவசாயிகள, இன்று அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் இருந்து கோவை புலியகுளம் கோவில் வரை 34 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
டிட்கோ மூலம் தொழில் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என பாதயாத்திரையாக நடத்து வந்து புலியகுளம் விநாயகர் கோவிலில் மனு கொடுத்து முறையிட்டு வழிபாடு நடத்த இருக்கின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“