திருச்சியில் காவிரி ஆற்றில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம்

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றுக்குள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தளவு புதைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றுக்குள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தளவு புதைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
farmer protest 2

காவிரி - அய்யாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிபடி மாணவர்களுக்கான கல்விக்கடனை ரத்து செய்யாததை கண்டித்து விவசாயிகள் திருச்சியில் காவிரி ஆற்றில் இறங்கி மணலில் புதைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி - அய்யாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிபடி மாணவர்களுக்கான கல்விக்கடனை ரத்து செய்யாததை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றில் இறங்கி கழுத்தளவு மணலில் புதைத்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisment

திருச்சி ஸ்ரீரங்கம்  மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றுக்குள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தளவு புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தின்போது, விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். காவிரி ஆற்றின் உபரி நீரை ஐயாற்றில் திருப்பி விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சியில் பரபரப்பு நிலவியது. 

Advertisment
Advertisements

பின்னர், மாநகர காவல்துறையினர் தலையிட்டு சமாதானமாக பேசி காவிரி ஆற்றில் இருந்து விவசாயிகளை வெளியேற்றினர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Tiruchirappalli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: