திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் மாங்குடி பகுதியில் சுமார் 6000 ஏக்கருக்கு மேல் சம்பா தாளடிப்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. தண்ணீர் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு நிலையில் . தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த 3-ம் தேதி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2டிஎம்சி தண்ணீர் விடுவதாக முதலமைச்சர் உத்திரவிட்டார். முதலமைச்சரின் அறிவிப் பிறகு மதிப்பளித்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 2 டிஎம்சி தண்ணீர் பயிர்களை பாதுகாக்க முடியாது குறைந்தபட்சம் 5 டிஎம்சி தண்ணீராவது 15 தினங்களுக்கு தொடர்ந்து விடுவிக்கும் வரையிலும் பயிர்களை பாதுகாக்க இயலாது எனக்கூறி அதிகாரிகளை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களை இன்று தமிழ்நாடு அரசின் நீர் பாசன துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சனா தலைமையில் அதிகாரிகள் வருவதாக மதியம் முதல் காத்திருந்தனர். திடீரென மாலை 5 மணி அளவில் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் மாங்குடி சரவணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். விரைந்து தண்ணீரை விடுவித்து பயிரைக் காக்க தண்ணீர் வேண்டும் எனவும், பார்வையிட வராமல் ஏமாற்றி அதிகாரிகளை கண்டித்தும் முழக்கமிட்டு வருகின்றனர்.
க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“