ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் நீர் திறக்க வேண்டும்; மேகத்தாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி இன்று (10.6.2024) பேரணியை தொடங்கினர. இந்தப் பேரணி, ஜூன் 12ல் மேட்டூர் அணையினை சென்றடைய உள்ளது.
அதற்காக (11.6.2024) செவ்வாய்க்கிழமை இன்று இரண்டாம் நாளாக கல்லணையில் துவங்கி, திருச்சி காவிரி பாலம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு முன்னிலையில் விவசாயிகள் அங்கிருந்து சிந்தாமணி அண்ணாசிலை, மெயின்காட்கேட், கரூர் பைபாஸ் சாலை வழியாக பேரணியாக சென்றனர். பேரணி முடிவில் மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சராக கர்நாடகாவை சேர்ந்த சோமண்ணாவை நியமனத்தை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
தென்னிந்திய நதிகள் இணைப்புத்தலைவர் பி. அய்யாக்கண்ணு, பொது செயலாளர் விகேவி துரைசாமி, முல்லைப்பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் எல் ஆதிமூலம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். துணை தலைவர்
வி எம்.பாரூக் நன்றி கூறினார்.
முன்னதாக கல்லணை ஆஞ்சநேயர் ஆராதனை மற்றும் கொள்ளிடத்தில் இறங்கி காவிரி நீர் ஆராதனை நிகழ்வு நடைபெற்றது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“