செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க இருந்த விவசாயிகளின் கிராமத்தை தடுப்புகளை பயன்படுத்தி காவல்துறையினர் தடுத்து வைத்தனர்.
திருவண்ணாமலையில் உள்ள, மேல்மா சாலையில் சுற்றியுள்ள 10 கிராமங்களை சேர்ந்த 300 மேற்பட்டோர் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இவர்கள் சிப்காட் விரிவாகத்தை எதிர்த்து முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்று போராட்டம் செய்தனர்.
போராட்டக்காரர்களில் ஒருவரான சந்திரன் கூறுகையில் “பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்து, சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்த 7 பேரில் 2 பேர் மட்டுமே விவசாயிகள் என்று தவறாக தெரிவித்தது தொடர்பாக குறிப்பிட்டு பேசுவதாக இருந்தனர்’ என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் “ எங்களது திட்டத்தை தெரிந்துகொண்ட காவல்துறையினர் 10 கிராமங்களை தடுப்புகள் ஏற்படுத்தி தடுத்து வைத்தனர்.” என்று கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு தொடர்ந்து இமெயில் அனுப்பி உள்ளனர். ஆனால் இதற்கு எந்த பதிலும் வரவில்லை என்பதால் சென்னைக்கு செல்ல போராட்டக்காரர்கள் முடிவு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“