உயர் மின்கோபுரங்கள் மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகளால் விவசாய நிலங்கள் மதிப்பிழந்து காணப்படுகிறது எனவும் அதற்கான உரிய இழப்பீட்டை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் பகுதியில் நவமலை முதல் உடுமலை வரை விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மதிப்பிழந்து காணப்படுகிறது.
விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“