பொங்கல் படைப்பதற்காக பயன்படுத்தப்படும் பன்னீர் கரும்பு மூன்றில் ஒரு பகுதியை தமிழக அரசு கொள்முதல் செய்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisment
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியைச் சேர்ந்த கிழக்கு ராமாபுரம், மேற்கு ரமாபுரம், வீ காட்டு பாளையம், வெள்ளை கரை, நடுவீரப்பட்டு பாளையம், சுப்ரமணியபுரம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, புவனகிரி உள்பட்ட பகுதிகளில் பன்னீர் கரும்பு இந்த ஆண்டு நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல், நான்கில் ஒரு பகுதியை தமிழக அரசு பன்னீர் கரும்பை கொள்முதல் செய்ததால் மேலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு இந்த பன்னீர் கரும்பை வைத்து தான் படைப்பது நம் தமிழர்களின் வழக்கம். அதனால், இந்தக் கரும்பிற்கு தை மாதத்தில் கிராக்கி அதிகம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்தக் கரும்பு விலை போகவில்லை. விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தாண்டு இந்தக் கரும்பு நன்றாக வந்ததன் விளைவால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisment
Advertisement
பொங்கல் பண்டிகை நெருங்கி இருப்பதால் இந்தக் கரும்பு வெட்டுகின்ற பணி கடலூர் மாவட்டம் முழுவதும் குறிப்பாக குறிஞ்சிப்பாடி தொகுதியான அதிக மகசூல் வந்ததால் வெட்டும் பணி தொடங்கி உள்ளது. 20 கழி கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ. 350-க்கு வெட்டும் இடத்திலேயே விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து சென்னை, வேலூர் போன்ற பகுதிகளுக்கு வியாபாரிகள் வந்து அள்ளிச் செல்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். அதேபோன்று, தற்போது வெட்டப்படும் கரும்பு 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 300 முதல் 350 வரை வெட்டுகின்ற இடத்திலேயே விற்பனை செய்கிறது. ஏக்கருக்கு 600 முதல் 700 கட்டுகள் வரை கரும்பு வெட்டப்படுகிறது. இதனால், பன்னீர் கரும்பு ஒரு ஏக்கருக்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் முதல் மூன்று லட்சம் வரை விற்பனையாகிறது.
தமிழக அரசு பொங்கலுக்கு இலவசமாக கரும்பு கொடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனால், மாவட்ட ஆட்சியர் தலைவர்கள் கொள்முதல் செய்யத் தொடங்கினர். அதன்படி, ஒரு பகுதியை அரசாங்கம் விலை கொடுத்து கொடுத்து வாங்கி விட்டனர். மீதமுள்ள கரும்பை வெளியூர் வியாபாரிகள் கரும்பு வெட்டும் இடத்திலேயே விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இதனால், விவசாயிகள் பெருத்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து ராமாபுரத்தை சேர்ந்த விவசாயி குழந்தைவேல் என்பவர் கூறுகையில், பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் பன்னீர் கரும்பு நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. இதனால், மகிழ்ச்சியாக இருக்கிறேன். எங்கள் தொகுதி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எங்கள் விவசாயிகளுக்கு நல்ல உதவிகளை உடனுக்குடன் செய்து வருகிறார். எனவே, குறிஞ்சிப்பாடி தொகுதியில் தொகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் கரும்புகளை விற்பனை செய்து வெட்டும் இடத்திலேயே கைமேல் பணத்தை பார்த்து விட்டனர். இதனால், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியில் உள்ளனர். மாவட்ட நிர்வாகமும் கரும்பு கொள்முதல் செய்ததால் கை மேல் பணத்தை பார்த்து விட்டோம் என மகிழ்ச்சியாகக் கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"