ஆண்டுக்கு ரூ36,000 மத்திய அரசு நிதி: உங்கள் பெயரை பதிவு செய்வது எப்படி?
பிரதான் மந்திரி கிஷான் மந்தன் திட்டத்தின் மூலம், 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக ரூபாய் 3000 வழங்கப்படும். இத்தொகையானது, ஆண்டுக்கு 36,000 ரூபாயாக உள்ளது.
மத்திய அரசு, விவசாய பெருமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அண்மையில், மத்திய அரசால் வயது முதிர்ந்த விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், நாட்டில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் ‘பிரதான் மந்திரி கிஷான் மந்தன் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisment
இத்திட்டத்தின் பயன் என்ன?
பிரதான் மந்திரி கிஷான் மந்தன் திட்டத்தின் மூலம், 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக ரூபாய் 3000 வழங்கப்படும். இத்தொகையானது, ஆண்டுக்கு 36,000 ரூபாயாக உள்ளது. ஒருவேளை, பயனாளி 60 வயதை கடந்து, உயிரிழந்த நிலையில் அவரது வாழ்க்கைத் துணைக்கு 50 விழுக்காடு ஓய்வூதியத் தொகை வழங்கப்படும். பயனாளிக்கு வாழ்க்கை துணை இல்லாத சூழலில், வேறு யாரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற இயலாது.
இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகளின் தகுதி என்ன?
இத்திட்டத்தின் மூலம் பயன் பெற 18 முதல் 40 வயதிற்குட்பட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். அதோடு, அவர்களின் வருமானம் பதினைந்தாயிரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். இதுவரையில், இந்த திட்டத்தில் சுமார் 39 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
இத்திட்டத்தால் பயனடைய விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?
விவசாயிகள், இந்த ஓய்வூதிய திட்டத்தில் பயனடைய திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளமான https://maandhan.in/, இந்த இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் மேலும், இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யலாம். பதிவு செய்த பின், விவசாயிகள் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட வயதின் அடிப்படையில், 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.