ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகளின் கடன்களை தள்ளுபடி செய்து விட்டு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்களுக்கு வங்கியில் க்ரடிட் ஆகும் மத்திய அரசின் 100-நாள் வேலைத்திட்டத்தில் இருந்து வரும் பணத்தை வங்கிகள் மூலம் பிடித்துக்கொள்வதை கண்டித்து திருச்சி கண்டோண்மெண்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகத்தை பூட்டும் போராட்டத்தில் திருச்சி விவசாயிகள் ஈடுபட்டனர்.
இதனால் வங்கிக்கு வாடிக்கையாளர் வர முடியாமலும், வங்கியில் இருந்து ஊழியர்கள் வெளியே செல்ல முடியாமலும் திணறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப்போராட்டம் குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவிக்கையில்; பிரதமர் மோடி ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகளின் கடன்களை தள்ளுபடி செய்து விட்டு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயிகளின் வங்கிக் கடன்களுக்கு வங்கியில் க்ரடிட் ஆகும் சிறுகுறு தொகையினை பிடித்தம் செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்” என்றார்.
முன்னதாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கண்டோன்மென்ட் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு திரண்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, வங்கிக்கு பூட்டு போட வந்ததாலும் அந்தப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். மேலும் வங்கியின் பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டது.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“