scorecardresearch

மயிலாடுதுறையில் சில இடங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்; விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் தற்காலிகமாக பல்வேறு பகுதிகளில் கொள்முதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது

மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை
மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் தற்போது வரை 85 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 19 மில்லி மீட்டர், செம்பனார்கோவிலில் 15.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் மயிலாடுதுறையில் 8.60 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்: சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் திருச்சி பத்திரிகையாளர்கள் குடும்பங்களின் பரிதாபநிலை!

இதன் காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் தற்காலிகமாக பல்வேறு பகுதிகளில் கொள்முதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விடாமல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது

மேலும் நல்லத்குடி, கோடங்குடி ஆனந்ததாண்டவபுரம், சேத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்முதல் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். சம்பா சாகுபடி தொடங்கும் காலத்தில் மழை பெய்ததால் விளைச்சல் பாதித்தது, தற்போது அறுவடை நேரத்திலும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

நெல்லை அறுவடை செய்து களத்தில் கொட்டி வைத்து விட்டு சாக்கில் நிரப்பும் முன்பே மழை பெய்து வருவதால் நெல் நனைந்து கொண்டிருக்கின்றது. இந்த நெல்லை அப்படியே விட்டுப்போனால் நாளடைவில் அதுவே விதை நெல்லாகி முளைக்கத் தொடங்கும். நெல் கொள்முதலும் நிறுத்தப்பட்டிருப்பதால் இந்த மழை எங்களுக்கு போராதகாலமாக இருக்கின்றது எனப் புலம்பினர்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Farmers worried some paddy procuring centers closed in mayiladuthurai

Best of Express