scorecardresearch

மு.க. ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக கூடாது? பரூக் அப்துல்லா

மு.க. ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்க கூடாது என பரூக் அப்துல்லா பேசியிருப்பது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Farooq Abdullah participates in Stalin's birthday rally
மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பரூக் அப்துல்லா பங்கேற்பு

தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 01) தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ.யில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சர் பரூக் அப்துல்லா சென்னை வந்தார்.

தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், “மு.க. ஸ்டாலின் காஷ்மீர்-கன்னியாகுமரி வரை மக்களை ஒன்றிணைக்க பாடுபடுகிறார். அவரே ஏன் பிரதம வேட்பாளராக இருக்க கூடாது” என்றார்.

இதையடுத்து மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய பரூக் அப்துல்லா, “முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து செயல்படுகிறார். நாடு சிக்கலில் உள்ளபோது இதனை செய்கிறார்” என்றார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Farooq abdullah participates in stalins birthday rally

Best of Express