காவிரி பிரச்னையில் ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் : இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் திங்கள்கிழமை (ஏப்ரல் 2ம் தேதி) தமிழகம் முழுவதும் அதிமுக சாரிபில் உண்ணாவிரத போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் திங்கள்கிழமை (ஏப்ரல் 2ம் தேதி) தமிழகம் முழுவதும் அதிமுக சாரிபில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மதுரையில் அறிவித்துள்ளார்.

மதுரையில் இன்று அதிமுக சார்பாக இலவச திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது, ‘‘காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். வரும் ஏப்ரல் 2ம் தேதி தமிழகம் முழுவதும் காரிவி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்’’ என அறிவித்தார்.

விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசும் போது, ‘‘காவிரி பிரச்னையில் ஒரு போதும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஏப்ரல் 2ம் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடைபெறும்’’ என்று அறிவித்தார்.

×Close
×Close