scorecardresearch

ரேஷன் அரிசி சாப்பாடு.. ஆழ்ந்த அமைதி.. 5 வேளை தொழுகை.. ஜமேஷா முபின் குறித்து மாமனார் பேட்டி

ஜமேஷா முபின், தேன், பழைய துணி, நாட்டு மருந்து விற்கப்போவதாக சொல்லி மாலை வேளையில் சென்றுவிடுவார்.

Tamil news
Tamil news updates

கார் வெடித்து உயிரிழந்த ஜமேசா முபினின் மாமனார் ஹனீபா இன்று (சனிக்கிழமை) பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஜமேஷா முபின் குடும்பத்தினர், அவருக்கு தெரிந்தவர் மூலமாக என் பெண்ணை கேட்டனர். முபின் வீட்டில் வந்து பார்த்துட்டு போனாங்க.
என் பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டாங்க தன்னை மாதிரி குறைபாடு இருக்கிற ஒருத்தரை தான் என மகள் திருமணம் செய்து கொண்டால்தான் பிரச்சனை வராது என எங்களிடம் சொன்னாள்.

இதனையடுத்து முபின் அம்மா சொந்த பெண் மாதிரி பார்த்துகிறேன். அவரது சகோதரிகள் எங்களது தங்கையை போல பார்த்துக்கிறேன் என சொன்னதாக தெரிவித்தார்.
இதனையடுத்து முபினும் எனது மகளிடம் நல்லா பார்த்துக்கிறேன். ஆதரவற்ற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வதாக இருந்தேன்.

உன்னை நல்லா பார்த்துக்கிறேன்னி சொல்லித்தான் எனது மகளை திருமணம் செய்தார். முபின் ரொம்பவும் அமைதியானவர். வீட்டிற்கு வந்தால் யாருடனும் பேச மாட்டார்.
மொபைல் பார்த்துட்டே இருப்பார்.ஐந்து வேலை தொழுவார். 2019இல் என்.ஐ.ஏ சோதனையில் தனக்கு பிரச்சனை ஒன்றும் இல்லை என்று சொல்லியுள்ளார்.

இரண்டு வருடம் பழைய புத்தக கடையில் வேலை பார்த்தவர். கண் குறைபாடு காரணமாக அறுவை சிகிச்சை செய்து மாமனார் வீட்டில் ஆறு மாதம் இருந்துள்ளார்.
அப்போது தேன், பழைய துணி, நாட்டு மருந்து விற்கப்போவதாக சொல்லி மாலை வேளையில் சென்றுவிடுவார்.

அவர் கடைசியாக கடந்த வியழாக்கிழமை எனது மகளுக்கு வயிற்று வலி என வந்தார். வெள்ளிக்கிழமை அவரது குழந்தைகளை கூட்டிச்சென்று விட்டு திரும்பவும் வீட்டில் விட்டு சென்றவரை யாரும் பார்க்கவில்லை.
முபின் அவுங்க அம்மாகிட்ட பணம் கொடுத்துவிட்டு தவறாக பேசி இருந்தால் மன்னிச்சுடுன்னு சொல்லி போனதாக சொன்னதாக தெரிவித்தார்.

ஸ்டேசன் பக்கம் நாங்க போனதில்லை இப்போ நிறைய பேர் வந்து விசாரிக்கறீங்க. இப்போ செய்திகள் வரும்போது தான் அவர் பின்னாடி இருந்து யாராவது இயக்கி இருக்காங்க போல் மாதிரி சந்தேகம் எழுவதாக தெரிவித்தார்.
முபின் ரொம்ப எளிமையானவர். ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்.
ரேசன் அரிசி மட்டும்தான் சாப்பிடுவார். அவருடைய சித்தி பையன் அசாருதீன் மட்டும்தான் வீட்டுக்கு அடிக்கடி வருவார் வேறு நண்பர்கள் கிடையாது என்றார் உயிரிழந்த ஜமேஷா முபினின் மாமனார் ஹனீஃபா.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Father in law of coimbatore car blast convict jamesha mubin says he is innocent