கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க ஐ.டி விங் தலைவராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
Advertisment
இது தொடர்பாக, முதலமைச்சர் குறித்து தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட பா.ஜ.க ஐ.டி விங் தலைவர் ஜெய்குமார் மீது திருநெல்வேலி மாவட்ட தி.மு.கவினர் திருநெல்வேலி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்த திருநெல்வேலி போலீசார் கடலூர் சென்று பா.ஜ.க நிர்வாகி ஜெய்குமாரை இன்று (ஜூலை 18) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெய்குமார் விசாரணைக்காக திருநெல்வேலி அழைத்து செல்லப்பட்டுள்ளார். முன்னதாக, இதுபோன்ற அவதூறு வழக்கில் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேலும் ஒரு பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“