தமிழ் கவிஞர் மகாகவி பாரதியை போற்றும் விதமாக ”அச்சம் தவிர் தேஜஸ் 2025” எனும் மகாகவி பாரதி மண்டல சந்திப்பு நிகழ்ச்சி சுந்தராபுரம் லிண்டஸ் கார்டன் அரங்கில் நடைபெற்றது. விழாவில் சாதனை மகளிரை கவுரவிக்கும் விதமாக பாரதி கண்ட புதுமை பெண்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், சமூக பணிகளில் தங்களை அர்ப்பணித்து செயல்பட்டு வருபவர்களுக்கு சிறந்த சேவைக்கான சிறந்த பேராசிரியர் விருது வழங்கப்பட்டது. கவுரவ அழைப்பாளர்களாக மகாகவி பாரதியாரின் கொள்ளு பேத்திகள் மற்றும் பேரன் கவிஞர் உமா பாரதி, ஸ்ரீ பிரியா பாரதி, சிவகுமார் பாரதி, மற்றும் கலந்து கொண்டு பெண்களுக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை