கோவை மருதமலை அடிவார வனப் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐந்தாவது நாளாக யானையை வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் உடல் நலம் குறித்து பரிசோதனை செய்தனர்.
இந்நிலையில் உடல் நலம் தேறிய காட்டு யானையை வனத்துறை வனப் பகுதிக்குள் விடுவிக்கும் பணிகளை துவங்கினர்.
/indian-express-tamil/media/media_files/hgE1YnERwWyMHKN5HZeC.jpeg)
கிரேன் ரோப்புகள் கழற்றி பெண் காட்டு யானை வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. விடுவித்த பெண் யானை காட்டுக்குள் சென்றதாக வனத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/7BARybiajn5G9jGk1pTV.jpeg)
இதனைத் தொடர்ந்து பெண் காட்டு யானையின் செயல்பாடுகளை வனத் துறையினர் கண்காணிக்க பின் தொடர்ந்து வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“