scorecardresearch

குரோம்பேட்டை: விபத்தில் காயம் அடைந்த எஸ்.ஐ-யை பார்க்கச் சென்ற பெண் காவலர் பலி; கார் மோதியது

சென்னை குரோம்பேட்டையில் கார் மோதிய விபத்து ஏற்பட்டதில் பெண் தலைமை காவலர் உயிரிழந்தார்.

குரோம்பேட்டை: விபத்தில் காயம் அடைந்த எஸ்.ஐ-யை பார்க்கச் சென்ற பெண் காவலர் பலி; கார் மோதியது

சென்னை குரோம்பேட்டையில் கார் மோதிய விபத்து ஏற்பட்டதில் பெண் தலைமை காவலர் உயிரிழந்தார்.

சென்னையில் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி‌ ஆய்வாளராக (எஸ்ஐ) ரமா பிரபா பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றபோது, குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை அருகே விபத்து ஏற்பட்டது.

இதனால், பலத்த காயம் ஏற்பட்டதும், தன்னுடன் பணிபுரியும் பெண் தலைமைக் காவலர் ஷீலா ஜெபமணியை (வயது 51) உதவிக்கு அழைத்துள்ளார்.

விபத்து நடந்த பகுதிக்கு ஷீலா ஜெபமணி செல்லும்போது, அவரது வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் அதி வேகத்தில் மோதியது. இதனால் நிலைதடுமாறி விழுந்த அவருக்கு, தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்தார்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் அனைவரும், பாதிக்கப்பட்டவரை உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கே அவருக்கு தலையில் 7 தையல்கள் போட்டும், மயக்க நிலையிலேயே இருந்துள்ளார்.

அவரது நிலைமை மோசமானதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவ்விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தபோது, முடிவில் கார் ஓட்டுநர் பல்லாவரத்தைச் சேர்ந்த சக்தியை (வயது 41) கைது செய்தனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Female head constable dies in chrompet accident