பெண் போலீசுக்கு விபத்தில் கால் எலும்பு முறிவு; வாட்ஸ் அப் குரூப் மூலம் நிதி திரட்டி உதவிய காவலர்கள்

திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு, காவலர்கள் கடலூர் காக்கும் உறவுகள் வாட்ஸ் அப் குழு மூலம் 1 லட்சத்து 50, ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி அளித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
police help

பணிபுரியும் காவலர்கள் ஒன்று கூடி காக்கும் உறவுகள் வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து இதுபோன்று விபத்து ஏற்பட்டு கஷ்டப்படும் காவலர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு, காவலர்கள் கடலூர் காக்கும் உறவுகள் வாட்ஸ் அப் குழு மூலம் 1 லட்சத்து 50, ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி அளித்துள்ளனர்.

Advertisment

கடலூர் மாவட்டம்  திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் . லட்சுமி   புதுச்சேரி அருகே கடந்த 9.7.2025 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாகன விபத்து ஏற்பட்டு கால் எலும்பு முறிவு பெற்றது. உடனடியாக சென்னை மியாட் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பணிபுரியும் காவலர்கள் ஒன்று கூடி காக்கும் உறவுகள் வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து இதுபோன்று விபத்து ஏற்பட்டு கஷ்டப்படும் காவலர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்த வாட்ஸ் அப் குரூப்பில் மாவட்டம் முழுவதும் சுமார் 15,000 போலீசார் உள்ளனர். தலா ரூபாய் 100 முதல் 300 வரை இயன்ற உதவியை  காவலர்களுக்குள் செய்து வருகின்றனர்.

2017 பேட்ச் கடலூர் காக்கும் உறவுகள் வாட்ஸ் அப் குழு மூலம்  ஒன்றிணைந்து  சிகிச்சை பெற்று வரும் பெண் காவலருக்கு  உதவி செய்யும் பொருட்டு ரூபாய் 1,51,100 நிதி திரட்டி இன்று  சககாவலர்கள் ராஜதுரை, அமரவர்மன், நெப்போலியன், பாலமுருகன், மீனாட்சி, நிஷாந்தினி ஆகியோர்கள் வீட்டிற்கு நேரில் சென்று திரட்டிய தொகையை வழங்கி ஆறுதல் கூறினார்கள் .

Cuddalore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: