விழுப்புரம் அருகே புயலால் பாதிக்கப்பட்ட மலட்ராறு பகுதியை ஒன்றியக் குழுவினர் பார்வையிட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயலால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டது. இந்த சேதமதிப்புகளை பார்வையிடுவதற்கு இன்று ஒன்றிய குழு விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒன்றிய குழு இரண்டு குழுக்களாக பிரிந்து விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.
ஒன்றிய அரசின் இணை செயலாளர் நஜேஷ் குப்தா தலைமையில் சென்ற குழுவினர். அரசூர் அருகே உள்ள மலட்டாறு பகுதியை ஆய்வு செய்தனர். ஆற்றில் இறங்கி ஆய்வு செய்து அங்கிருந்த பொதுமக்கள் விவசாயிகளுடன் குறைகளை கேட்டு அறிந்தனர். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil