ஃபீஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் புயலின் தாக்கத்தின் விளைவாக விடாமல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுவை லாசுப்பேட்டை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் தற்போது அந்த பள்ளி முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது.
மேலும் சுற்றுசுவர் இடிந்து விழுந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.
இன்று அதிகாலை (டிச.1) ஃபீஞ்சல் புயல் புதுச்சேரிக்கு நெருக்கத்தில் மைய கண் பகுதியில் கரையை கடந்தது. அடுத்த சில மணி நேரங்களில் புயல் என்கிற நிலையிலிருந்து வழு குறைந்து அது ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையை அடையும்.
தற்சமயம் அடர்த்தியான வலுநிறைந்த மழை மேகங்கள் புதுச்சேரிக்கு வடக்கே இருக்கும் விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் காணப்படுகிறது. புதுச்சேரியில் இனி மழை மெல்ல மெல்ல குறைய தொடங்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுவரையில் புதுச்சேரியில் 46 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
மேலும் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் இது எந்த நேரத்திலும் 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்து திறக்க வாய்ப்புள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“