ஃபீஞ்சல் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் வெவ்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை பாரிஸ் கார்னரில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்ற வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இதேபோல் மேலும் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
புயல் கரையை கடந்த பிறகும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் 13 மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சென்னை வேளச்சேரியில் சாலையில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்த சக்திவேல் என்பவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதேபோன்று சென்னை வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இசைவானன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்த இசைவாணனின் உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மொத்தம் மின்சாரம் தாக்கி சென்னையில் மட்டும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மோசமான வானிலை மற்றும் செயல்பாட்டு காரணங்களால் சென்னைக்கு வரும் மற்றும் புறப்படும் 13 விமானங்கள் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“