தென்கிழக்கு வங்கக்கடல் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவ.27) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.27) புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு ஃபீஞ்சல் புயல் எனப் பெயரிடப்பட உள்ளது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த புயல் மத்திய இலங்கை அதனையொட்டி வடமேற்கு வங்க கடலில் நாகையில் இருந்து 420 கி.மீ தெற்கே தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து 530 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இன்று உருவாகும் ஃபீஞ்சல் புயல் 29ம் தேதி வரை வங்க கடலில் புயலாகவே நீடிக்கும். அதன் பின் நகர்ந்து 30ம் தேதி அன்று சென்னைக்கு 30கிமீ தொலைவில் மையம் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, புயல் கரையை நெருங்கும் முன் மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“