Advertisment

சசிகலா அந்நிய செலாவணி மோசடி வழக்கு ஜூலை 16க்கு ஒத்திவைப்பு

சசிகலாவிடம் கேள்விகள் கேட்க ஏதுவாக வழக்கின் ஆவணங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக வழக்கு விசாரணை ஜூலை மாதம் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FERA violation case against Sasikala

FERA violation case against Sasikala

FERA violation case against Sasikala : சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை ஜூலை மாதம் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் அன்னிய செலாவணி மோசடியி்ல் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெ ஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் 1996-ல் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், சசிகலா, பாஸ்கரன் இரண்டு பேர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

தற்போது, அமலாக்கத்துறை தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, குற்ற விசாரணை முறைச் சட்டம் 313வது பிரிவின் கீழ், சாட்சிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டவர்களிடம் கேள்விகளை கேட்டு பதிலை பதிவு செய்யும் நடைமுறைக்காக சசிகலா மற்றும் பாஸ்கரனை நேரில் ஆஜராக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..

இந்த நிலையில் தன் உடல்நிலையை கருத்தில்கொண்டு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என சசிகலா தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி அளித்து உத்தரவிட்டது

இந்த வழக்கு இன்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் சசிகலா தரப்பு வழக்கறிஞர்களால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து சசிகலாவிடம் கேள்விகள் கேட்க ஏதுவாக வழக்கின் ஆவணங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக வழக்கு விசாரணை ஜூலை மாதம் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சசிகலா வீடியோ கான்பரன்சிங் மூலமும் பாஸ்கரன் நேரிலும் ஆஜராவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment