நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பலில் செல்ல இன்று (ஆக.12) நள்ளிரவு முதல் முன்பதிவு தொடக்கம். நாகை- காங்கேசன்துறை கப்பல் சேவை ஆகஸ்ட் 16 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண வகுப்பு கட்டணமாக ஒருவருக்கு ₹5,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் வகுப்பில் ஒரு நபருக்கு கட்டணமாக ₹7,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த கப்பல் சேவைக்கு அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘சிவகங்கை’ என்று பெயரிடப்பட்ட கப்பல் சென்னை வழியாக நாகப்பட்டினத்திற்கு அண்மையில் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் இன்று நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்தது. கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகளும்,பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நபர் ஒருவர் 60 கிலோ வரை பார்சல் எடுத்துச் செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்லவும் முடியும்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“