தொற்று எண்ணிக்கை குறைவு; இறப்பு விகிதம் அதிகம் – தமிழகத்தின் சி.எஃப்.ஆர் எவ்வளவு?

அதிக அளவில் சென்னையில் வழக்குகள் (7564) மே 12ம் தேதி பதிவானது. ஆனால் அதிகமான இறப்புகள் மே 21 (109) மற்றும் மே 28 (107) அன்று பதிவானது.

Covid-19 cases : தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், கொரோனா இறப்பு விகிதம் (Covid-19 case fatality rate) குறையவில்லை. சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

சென்னையில் தினசரி கொரோனா தொற்று 6247ல் இருந்து 689 ஆக குறைந்துள்ளது. அதே போன்று கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தில் இருந்து 6500ஆக குறைந்துள்ளது. ஆனால் மே 16 முதல் ஜூன் 16 வரையிலான காலத்தில் இறப்பு விகிதம் 1.31%-த்தில் இருந்து 1.5% ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று தமிழகத்தில் மே 16ம் தேதி அன்று தமிழகத்தில் 1.1% ஆக இருந்த இறப்பு விகிதம் 1.27% ஆக உயர்ந்தது.

இறப்பு சதவீதமும் வீழ்ச்சி அடையும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இறப்புகள் அனைத்தும் இரண்டு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வழக்குகளின் பிரதிபலிப்பாகும்.

இறப்பு விகிதங்களின் பதிவுகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் கூட இந்த மரணங்கள் விகிதம் அதிகரிப்பிற்கு காரணமாக அமையலாம். தொற்றுநோய் வளைவு உச்சத்தில் இருந்தபோது, கவனிப்புக்கான அணுகல் குறைவாக இருந்ததால் இறப்புகள் பதிவு குறைந்திருக்கலாம். பலர் சோதனை மேற்கொண்டிருக்க மாட்டார்கள் அல்லது மருத்துவமனை கவனிப்பை நாடியிருக்க மாட்டார்கள். இந்த இறப்புகள் கொரோனா இறப்புகளாக பதிவு செய்யப்பட்டிருக்காது. வழக்குகள் குறைந்து வருவதால், அதிகமான இறப்புகள் இப்போது சுகாதாரப் பணியாளர்களால் கணக்கிடப்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு அதிக அளவில் சென்னையில் வழக்குகள் (7564) மே 12ம் தேதி பதிவானது. ஆனால் அதிகமான இறப்புகள் மே 21 (109) மற்றும் மே 28 (107) அன்று பதிவானது.

சென்னையில் திருவிக நகரில் கொரோனா இறப்பு விகிதம் (1.98%) அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து தேனாம்பேட்டையில் 1.83% ஆக இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது. மிகவும் குறைவான அளவாக சோழிங்கநல்லூரில் 0.77% இறப்பு விகிதமும், மணலியில் 0.96% ஆகவும் இறப்பு விகிதம் பதிவானது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Fewer covid 19 cases but fatality rate up in tamil nadu

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com