scorecardresearch

அதிரடி சோதனை: சென்னையில் 55 பழங்கால சிலைகள் மீட்பு

சென்னையில், பெண் ஒருவர் வீட்டில், பதுக்கி வைக்கப்படிருந்த, 55 பழமையான சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

கோவில் சிலை

சென்னையில், பெண் ஒருவர் வீட்டில், பதுக்கி வைக்கப்படிருந்த, 55 பழமையான சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், ஷோபனா துரைராஜன் வசித்து வருகிறார். இவர் கலை தொடர்பான பொருட்களை சேர்த்து வைக்கும் பழக்கம் கொண்டவர். இந்நிலையில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,  சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.  இந்நிலையில் அங்கே இருந்த  44 பழங்கால சிலையை பரிமுதல் செய்தனர்.

கடந்த 2012ல், அரியலூர் மாவட்டம் , வேலூர் செந்துரை வரதராஜ பெருமாள் கோவிலில் கதவை, உடைத்து, 4 சிலைகளை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.  இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் திருடு போன அனுமன் சிலை அமரிக்காவின் அருங்காட்சியத்தில் இருந்தது.  அதனை  மீட்டு சென்னைக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில் “ 55 கற்சிலைகள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகள் எந்த கோவிலுக்கு  சொந்தமானவை என விசாரித்து வருகிறோம்.

இந்நிலையில் இந்த சிலைகளை வீட்டில் வைத்திருந்த ஷோபனா, கலை பொருட்களை சேகரிக்கும் பழக்கம் கொண்டவர். இவர் தீனதயாளன் என்பவரிடம் சிலைகளை வாங்கி உள்ளார். சிலை கடத்தலில் பிரபலமாக அறியப்படும் கடத்தல்காரர்தான் தீனதயாளன்.

இரண்டு ஆண்டுகளில், 300 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 64 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கடந்த 1983 முதல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு செயல்பட்டு வருவதால், 1, 541 சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.    

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Fifty five kovil old idols recovered chennai