உள்ளாட்சி தேர்தல் : உத்தேச கால அட்டவணையை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான உத்தேச கால அட்டவணை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

By: July 26, 2017, 8:30:41 PM

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான உத்தேச கால அட்டவணை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்த வில்லை எனவும் தேர்தல் அறிவிப்பு அவசர நிலையில் நடத்தபட்டுள்ளதாகவும் கூறி தெடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து  தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த  டிவிசன் பெஞ்ச்  மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே ஜூலை இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடித்துவிடுவேம் என உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கபட்டது.  இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் மேல் முறையீட்டு மனு இன்று மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர்  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார் தரப்பில் ஆஜாரன வக்கீல்கள் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார். 

பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு துணை தலைவர் பதவி முதல் துணை மேயர் வரை அனைத்து பதவிகளுக்கும் வழங்க வேண்டும் இதனை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல் பழனிமுத்து வாதிட்டார்.

மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜாரன வக்கீல் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக உள்ளதாகவும் வாக்காளர்கள் பட்டியலில் சரிபார்க்கபட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை முழுமையாக செயல்படுத்த வேண்டும் இதில் சில உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் தான் செய்ய வேண்டும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது என தெரிவித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வார்டு வரையரை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசு தன்னுடைய பணியை முடித்தால் அதன் பிறகு 50 நாட்களில் தேர்தலை நடத்தி முடித்து புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்க பார்கள் என தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துக்குமார சாமி, ஏற்கனவே தொகுதி வரையறை தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள உள்ளது. அந்த வழக்கில் புதிதாக தொகுதி வரையறை செய்ய உத்தரவிட்டால் தற்போதைய வார்டு மறு வரையறைகள் செல்லாது. இதனால் அரசுக்கு சுமார் பல கோடி இழப்பு ஏற்படும் எனவே தான் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு காத்திருப்பதாக தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதத்திற்கு பிறகு நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பான உத்தேச பணி கால அட்டவணை மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:File tentative table for local body election chennai high court directs to tn govt tn ec

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X