/tamil-ie/media/media_files/uploads/2022/10/Nirmala-Sitaraman-buy-veggies.jpg)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மயிலாப்பூரில் தெருவொர கடையில் காய்கறி வாங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். நிகழ்ச்சி முடிந்து மாலையில் சென்னை மயிலாப்பூர் வழியாக விமான நிலையம் சென்றார். அப்போது, அங்குள்ள மார்க்கெட்டில் தனது வாகனத்தை நிறுத்தி கீழிறங்கினார்.
இதையும் படியுங்கள்: வால்பாறையில் ரேஷன் கடையை உடைத்த காட்டு யானைகள்; பொதுமக்கள் அச்சம்
பின்னர் அங்கிருந்த ஒரு காய்கறி கடைக்குச் சென்று, விற்பனை செய்யும் பெண்ணிடம் உரையாடினார். பின்னர் அருகிலிருந்த உள்ளூர் வாசிகளிடமும் நிர்மலா சீதாராமன் உரையாடினார். தொடர்ந்து அவர், சில காய்கறிகளை வாங்கினார். குறிப்பாக கருணைக்கிழங்கை தானே சென்று தேர்வு செய்து எடுத்து வாங்கினார்.
இதுதொடர்பான வீடியோவை, நிர்மலா சீதாராமனின் அலுவலக ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
During her day-long visit to Chennai, Smt @nsitharaman made a halt at Mylapore market where she interacted with the vendors & local residents and also purchased vegetables. pic.twitter.com/emJlu81BRh
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) October 8, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.