நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு?: அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

இந்தியாவின் கடன் சுமை கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு அதில் அடித்த கமிஷன் எவ்வளவு என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Annamalai and T Tennarasu

இந்தியாவின் கடன் சுமை 2025-ஆம் ஆண்டுப்படி ரூ. 181.24 லட்சம் கோடியாக இருப்பதாக சுட்டிக் காட்டிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இதன் மூலம் மத்திய அரசு கமிஷனாக அடித்த தொகை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

முன்னதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்து முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சிக்கும் விதமான பதிவு ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், "இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. 

இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும்.

Advertisment
Advertisements

கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. 

 

 

கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு, திரு ஸ்டாலின்?" எனக் குறிப்பிட்டுருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமான பதிவு ஒன்றை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், "2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா? 

 

 

தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள். 

கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை, ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

Thangam Thennarasu BJP Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: