scorecardresearch

தமிழ் அறிஞர்களுக்கு நிதி உதவி: விண்ணப்பிக்கும் முறை என்ன?

58 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தமிழ் அறிஞர்கள், அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ.72,000 உள்ளவர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ் அறிஞர்களுக்கு நிதி உதவி: விண்ணப்பிக்கும் முறை என்ன?

தமிழ் வளர்ச்சித் துறையானது 2022-23 நிதி உதவித் திட்டத்தில், வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு நிதி உதவி வழங்க விண்ணப்பங்கள் அனுப்ப கோரியுள்ளது.

58 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தமிழ் அறிஞர்கள், அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ.72,000 உள்ளவர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,500 நிதியுதவி மற்றும் ரூ.500 மருத்துவ உதவித்தொகை தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் வழங்கப்படும்.

இந்த நிதி உதவி திட்டத்திற்கு கீழ் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் வருமானச் சான்றிதழ் மற்றும் இரண்டு தமிழ் அறிஞர்களிடம் பெற்ற அனுபவச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். சென்னையில் உள்ளவர்கள் மட்டும் எழும்பூரில் உள்ள துறையின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Financial assistance for aged tamil scholars

Best of Express