திருப்பதி கோவில் பற்றி என்ன பேசினார் சிவகுமார்? எஃப்.ஐ.ஆர் முழு விவரம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் சிவகுமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிவகுமார் திருப்பதி கோயில் பற்றி என்ன பேசினார்? என்பது குறித்து முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.

By: Updated: June 7, 2020, 05:18:44 PM

திருப்பதி ஏழுமலையான் கோயில் பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் சிவகுமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிவகுமார் திருப்பதி கோயில் பற்றி என்ன பேசினார்? என்பது குறித்து முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் பற்றி பேசியது சர்ச்சையானபோது, அப்போது நடிகர் சிவகுமார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோவும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. அதில், தஞ்சை பெரிய கோயிலில் தீண்டாமை நிலவுவதாகவும் திருப்பதி கோயில் பற்றியும் பேசியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் சிவகுமார் திருப்பதி ஏழுமலையான் கோயில் பற்றி அவதூறாக பேசியதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் விஜிலன்ஸ் பிரிவு போலீசார் அளித்த புகாரின் பேரில் திருப்பதி போலீஸார் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் சிவகுமார் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் விஜிலன்ஸ் பிரிவு போலீசார் வி.சுப்ரமணியம் ரெட்டி திருமலை II டவுன் காவல் நிலையத்தில் நடிகர் சிவகுமார் மீது புகார் அளித்துள்ளார்.


அந்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், 29.04.2020 அன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் விஜிலன்ஸ் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் புகார் அளித்துள்ளார். புகாரில், அவர் தமிழ் மாயன் என்பவர் ranjithraj0874@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பிய புகாரைப் பெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த மின்னஞ்சலில் அந்த நபர், தான் 26.04.2020 அன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் பற்றி தமிழ் மொழியில் ஒரு வீடியோவைப் பார்த்ததாகவும், அதில் நடிகர் சிவகுமார் திருப்பதி கோயிலுக்கு எதிராக அவதூறான பிரசாரம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த வீடியோவைப் பார்த்த பிறகு, ஆதாரமற்ற அவரது பேச்சால் அனைத்து இந்து மக்களின் மனதும் காயப்பட்டுள்ளதாக உணர்ந்துள்ளனர். மேலும், மற்றவர்களை கோயிலுக்கு போக வேண்டாம் என்று கூறியுள்ளார் அதனால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த மின்னஞ்சலில் அவர் ஒரு யூடியூப் வீடியோ இணைப்பையும் பகிர்ந்திருந்தார்.

அந்த யூடியுப் வீடியோ பில்கிரிம் என்ற பெயரில் யூடியூப்பில் பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு கூட்டத்தில் நடிகர் சிவகுமார் 6 நிமிடம் தமிழில் பேசுகிற வீடியோ இடம் பெற்றுள்ளது. அதில் நடிகர் சிவகுமார் பேசியதாவது: “அவர் எந்த கோயிலுக்கும் பொவதில்லையாம். ஏனென்றால், கோயில்களில் ஏழை பணக்காரர்களுக்கு இடையே வேறுபாடு காட்டப்படுகிறது. தஞ்சாவூரில் 15×15 அளவில் சிவலிங்கம் சிற்பிகளால் செதுக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்குப் பிறகு அந்த சிற்பிகளே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அவர் அந்த வீடியோவில் 1.20 நிமிடம் முதல் 2.24 நிமிடம் வரை திருமலை கோயில் பற்றி பேசுகையில், பக்தர்கள் 48 நாள் விரதம் முடித்து காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு கால்நாடையாகவே நடந்து செல்கின்றன. ரதோத்ஸவம் காலத்தில் பக்தர்களுகு தண்ணீர் மட்டுமே அளிக்கப்படுகிறது. அங்கே சென்றால் கோயிலைச் சுற்றி பாம்புபோல 8 சுற்று நீண்ட வரிசையில் பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர். 4 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே செல்கின்றனர். அங்கே பக்தர்களை ஜருக்கண்டி ஜருக்கண்டி என்று பிடித்து தள்ளுகிறார்கள். அதுவே அங்கே ஒரு பணக்காரன் போனால், அவருக்கு ஒரு விருந்தினர் அறை ஒதுக்கப்படுகிறது. அங்கே அந்த பணக்காரர் மது அருந்திவிட்டு மனைவிக்கு தெரியாமல் ஒரு கொஞ்சும் குமரியுடன் கும்மாளம் அடித்துவிட்டு அடுத்த நாள் அந்த பணக்காரர் குளிக்காமல் கோயிலுக்கு செல்கிறார். அங்கே அவர் கோயிலில் வரவேற்கப்பட்டு கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. நான் புருடாவிடவில்லை. இதை நான் கண்ணால பார்த்திருக்கிறேன் என்று கூறுகிறார். இந்த யூடியூப் வீடியோவில், தமிழ் நடிகர் சிவகுமார், திருமலை திருப்பதி கோயிலுக்கு எதிராக தவறான பிரசாரம் செய்கிறார். இதன் மூலம், திருமலையில் சில சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுவதாகவும் அதனால், திருமலை திருப்பதி கோயிலுக்கு போகவேண்டாம் என்றும் அறிவுரை கூறுகிறார். ஆகையினால், பக்தர்களின் உணர்வு புன்படும்படியாக உள்ளதால் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுளது என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.


நடிகர் சிவகுமார் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் திருப்பதி கோயில் பற்றி அவதூறாக பேசியதாக திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Fir details against actor sivakumar about as derogatory speech on tirumala tirupati temple

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X