/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-11T135145.020.jpg)
மழைநீர் வடிகால் வாரியம் தொடர்பாக ரூ.290 கோடி டெண்டர் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ரூபாய் 26.61 கோடி முறைகேடு செய்ததாக, அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்தது.
அந்தப் புகாரில், மழைநீர் வடிகால் அமைக்க 290 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சாலைகள் அமைப்பதற்காக 246 கோடி ரூபாயிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் ஒப்பந்தாரர்களை முடிவு செய்வதில் விதிமீறல் நடந்துள்ளதாகவும், எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும், அதன் மூலம் 26.61 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அறப்போர் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் எஸ்.பி வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி சேர்ந்த 11 பொறியாளர்கள் மீது ரூ. 26.61 கோடி முறைகேடு செய்ததாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் முருகன், கண்காணிப்பு பொறியாளர் சின்னச்சாமி, செயற்பொறியாளர்கள் சரவணமூர்த்தி, பெரியசாமி, சின்னதுரை, நாச்சன், முன்னாள் செயற்பொறியாளர் சுகுமார், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், தலைமை பொறியாளர் நந்தகுமார், முதன்மை பொறியாளர் புகழேந்தி உள்ளிட்டோர் மீது ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us