கும்மிடிப்பூண்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில், லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், ஒருவர் பலியானார். இதில், திருமண மண்டப உரிமையாளர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தில், கடந்த 13ம் ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த மணமகனுக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறது. இந்த மண்டபத்தில் தரைத் தளத்தில் வரவேற்பு அறையும் முதல் தளத்தில் உணவுக் கூடமும் உள்ளது. கீழ் தளத்தில் சமையல் செய்யப்பட்டு, முதல் தளத்துக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சேல்வது வழக்கம்.
கடந்த வெள்ளிகிழமை, இந்த மண்டபத்தில் கேட்டரிங் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் உணவுப் பொருட்களை லிஃப்ட்டில் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக லிஃப்ட் ரோப் திடீரென அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், இதில், கேட்டரிங் ஊழியரான சீத்தல் என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெயராமன் விக்னேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியானது தொடர்பாக, திருமண மண்டபத்தின் உரிமையாளர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் திருமண மண்டபத்தின் மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிஃப்ட் ஆப்பரேட்டர் கக்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவை போலீசார் தேடிவருகின்றனர். இதனால், ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"