Advertisment

எடப்பாடி பழனிசாமி, சசிகலா பற்றி விமர்சனம்: வழக்கில் சிக்கினார் உதயநிதி

முதல்வர் பழனிசாமி, சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
fir registered against udhaynidhi stalin, central police fir registered on udhayanidhi, udhayanidhi derogatory speech about cm palaniswami sasikala, உதயநிதி ஸ்டாலின், உதயநிதி, உதயநிதி மீது வழக்குப் பதிவு, மத்திய குற்றப் பிரிவு போலீசார் உதயநிதி மீது வழக்குப்பதிவு, சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, udhayanidhi stalin, vk sasikala, cm edappadi k palaniswami, dmk, aiadmk

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி, சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது. உதநிதியின் பேச்சுக்கு பாஜக, அமமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் உதயநிதி மீது வழக்குப்பதி செய்துள்ளனர்.

Advertisment

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு வாரத்திக்கு முன்பு திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “மோடிக்கு எடுபிடியாக ஆட்சி செய்து வருவதால் எடப்பாடி ஆட்சியை எடுபிடி ஆட்சி எனக் கூறுகிறோம். டெட்பாடி ஆட்சி என்கிறார்கள். சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு” என்று பேசியதோடு மிகவும் மோசமான வார்த்தையையும் பேசினார். பேச்சைக் கேட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் பலரும் சிரித்தனர். உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

உதயநிதியின் பேச்சு பெண்களை அவமதிப்பதாக உள்ளது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். உதயநிதி ஸ்டாலின் தனது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தும் வகையில் இருந்தால், வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி மற்றும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி, சசிகலா குறித்து அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜலட்சுமி என்ற அதிமுக பிரமுகர் அண்மையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் , சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி மற்றும் சசிகலா குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவதூறாக பேசியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அநாகரிகமாக பேசியிருக்கிறார். காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இருந்தார். ராஜலட்சுமி உதயநிதி பேசிய வீடியோவை ஆதாரமாக ஒப்படைத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வீடியோக்களை ஆய்வு செய்தபின், உதயநிதி மீது ஆபாசமாக பேசுதல், தொழில்நுட்ப தகவல் சட்டம், பெண்களை இழிவாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Dmk Udhayanidhi Stalin V K Sasikala Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment