வீட்டின் சமையல் அறையில் பெட்ரோல் பயன்படுத்திய போது திடீரென தீப்பற்றியதில் 3 லாரி ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மற்றொரு ஓட்டுநர் வீரமணி (வயது 26) இன்று உயிரிழப்பு.
கோவை சூலூர் அடுத்த முத்துகவுண்டன் புதூர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து லாரி ஓட்டுநர்கள் அழகு ராஜா, முத்துக்குமார், சின்ன கருப்பு, தினேஷ், வீரமணி, மனோஜ், பாண்டீஸ்வரன் ஆகிய 7 பேர் தங்கி உள்ளனர்.
இருகூர் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்குகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள எரிபொருள் நிரப்பி மையங்களுக்கு எரிபொருட்களை டேங்கர் லாரி மூலம் கொண்டு சேர்க்கும் பணியினை செய்து வருகின்றனர்.
லாரி டேங்கர்களில் மிச்சமாகும் எரிபொருட்களை எடுத்து வந்து குடியிருப்பு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததாக கூறப்படும் நிலையில் வீட்டில் 20 லிட்டர் பெட்ரோல் வைத்து இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் விபத்து வழக்கு ஒன்றில் சிக்கிய ஓட்டுனர் அழகுராஜா விசாரணைக்காக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஆஜராகி விட்டு வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்த தனது ஓட்டுநர் நண்பர்களான
சின்ன கருப்பு, பாண்டீஸ்வரன், தினேஷ் ஆகியோருடன் மது அருந்தி உள்ளார்.
சமையல் அடுப்பில் ஓட்டுநர் பாண்டீஸ்வரன் சமைத்துக் கொண்டு இருந்த நிலையில் திடீரென அறை முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியதாகவும் அறை முழுவதும் பரவியதால் அறையில் இருந்த 7 பேருக்கும் தீ பிடித்து உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அழகுராஜா, சின்னக் கருப்பு, முத்துக்குமார் ஆகிய மூவர் உயிரிழந்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். அதேபோல சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் படுகாயம் அடைந்த பாண்டீஸ்வரன், தினேஷ், வீரமணி, மனோஜ் ஆகிய நால்வரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சூலூர் போலீசார் விசாரணையை முன்னெடுத்து உள்ளனர்.
படுகாயம் அடைந்த ஓட்டுநர்கள் நால்வருக்கும் சுமார் 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு உள்ள நிலையில் கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் படுகாயமடைந்த டிரைவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதில் காயமடைந்தவர்களில் ஒருவர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் அவர் அறையில் மற்ற டிரைவர்கள் மது அருந்தியதாகவும் அந்த நேரத்தில் சமையல் எரிவாயு அடுப்பில் சமைத்து கொண்டு இருந்து உள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் எரிவாயு அடுப்பு அருகே இருந்த 10 லிட்டர் கேனில் இருந்த பெட்ரோலை ஒரு லிட்டர் கேனுக்கு ஊற்ற முயன்றதால் அறை முழுவதும் தீ பரவியதாகவும் அதனால் விபத்து ஏற்பட்டது என்றும் கூறி உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.
லாரி ஓட்டுனர்கள் 7 பேர் ஒரே அறையில் தங்கி இருந்த நிலையில் தீ விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோக நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுப்பில் தீ பற்ற வைத்ததால் ஏற்பட்ட விபத்து என நீதிபதியிடம் வாக்குமூலம்,.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“