/tamil-ie/media/media_files/uploads/2023/03/fire-1-1.jpg)
புதுச்சேரி தவளகுப்பம் அருகே பட்டாசு தொழிற்சாலை வெடித்து 3 பேர் பலி மேலும் பலர் இதில் விபத்துக்குள்ளானதாக வந்த தகவலைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தினார்.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே உள்ள தமிழகப் பகுதியான காட்டுப்பாளையம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை திடீரென்று அதிக சத்தத்துடன் வெடித்தது அங்கு பணி புரிந்த மூன்று பேர் உயிரிழந்ததாக வந்த தகவலை தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் மேலும் வேலை செய்த இன்னும் பல பேர் நிலைமை என்னவென்று தெரியவில்லை இதை கேள்விப்பட்ட கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ரெட்டிச்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் விரைந்து வந்து பட்டாசு தொழிற்சாலை வெடித்தது எப்படி என்று சடலங்களை கைப்பற்றி கடலூர் வெடிபொருள் ஆராய்ச்சி காவல் நிலைய காவலர்களும் கடலூர் மாவட்ட வி.ஏ.ஓ தலைமையில் விசாரித்தனர்..
ரெட்டி சாவடி பகுதிகளில் தொடர் பட்டாசு தொழிற்சாலைகள் கவனக்குறைவுடன் செயல்படுவதால் மேலும் வெட்டி சாவடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியான பெரிய இருசாம் பாளையம் பகுதியில் சென்ற ஆண்டு திருவிழாவின் போது அங்கு சின்ன இருசாம் பாளையம் பகுதியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வரும் ஒருவர் திருவிழாக்கு பட்டாசு வெடிக்கும் போது குடித்துவிட்டு கவன குறைவுடன் பட்டாசு வெடித்ததால் அங்கு திருவிழாவை வேடிக்க பார்க்க சென்ற பெரிய இருசாம்பாளையத்தை சேர்ந்த இளைஞன் உள்பட பத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலை விபத்துக்குள்ளானார்கள்.
ரெட்டி சாவடி காவல் நிலையம் மெத்தன போக்கை கையாண்டதால் தவறு செய்தவர்களை கைது செய்யாமல் இருந்ததால் பயமின்றி பட்டாசு தொழில் செய்பவர்கள் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி செயல்படுவதால் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
இதில் ரெட்டி சாவடி காவல் நிலையத்தில் அதிகாரிகளின் கவனக் குறைவு காரணம் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறி வருகிறார்கள். இந்த சம்பவம் காட்டுப்பாளையம் பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
செய்தி: பாபு ராஜேந்திரன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.