Advertisment

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தில் தீ விபத்து: நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 2-வது தளத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
rama hsp

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் நள்ளிரவில் மின் கசிவு ஏற்பட்டதால் 2வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு நோயாளிகள் அனைவரையும் பாதுகாப்பாக முதல் தளத்திற்கு ஊழியர்கள் அழைத்து வந்தனர். இதன்படி 380க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 

Advertisment

ஐந்து தளங்களைக் கொண்ட மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்ட்டர் அறையில் நேற்றிரவு 11.20 மணியளவில் திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். 

 2rama hsp

இரண்டாவது தளத்தில் அறுவை சிகிச்சை நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அறையில் புகை சூழந்ததால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. 

Advertisment
Advertisement

 3rama hsp

உடனடியாக காவல்துறையினர், மருத்துவமனை ஊழியர்கள் டார்ச் லைட் பயன்படுத்தி இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட நோயாளிகளை ஸ்ட்ரெச்சர் பயன்படுத்தியும், தூக்கிக் கொண்டும் முதல் தளத்துக்கு அழைத்து வந்தனர்.

மருத்துவமனை வளாகம் இருளில் மூழ்கியதாலும், புகை காரணமாகவும் நோயாளிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதனிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment