கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மழையில் ஏற்பட்ட காட்டுத் தீ, தீயணைப்பு படையினரால் சுமார் 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை “வெள்ளியங்கிரி மலையில்” சுயம்புவாக எழுந்தருளும் சிவபெருமானை வழிபட ஆண்டுதோறும் மார்ச் ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
மொத்தம் ஏழு மலைகளைக் கொண்ட வெள்ளியங்கிரி மலை ஏற ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுப்பர்.
இந்த ஆண்டு சிவராத்திரி முதல் பக்தர்கள் மலை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலையில் 4வது மலையில் காட்டுத் தீ ஏற்பட்டது.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வனப்பணியாளர்கள், தீ தடுப்பு காவலர்கள் மற்றும் மலைவாழ் கிராம மக்கள் உதவியுடன் காட்டுத்தீயை அணைக்கும் பணி மேற்க்கொள்ளப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படாமல் கீழேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் பல பக்தர்கள் ஆறு மற்றும் ஏழாவது மலையில் காட்டுத் தீயைக் கண்டு அச்சத்தில் அங்கேயே ஒதுங்கி இருந்து விட்டதாக தெரிகிறது.
இவ்வாறான சூழலில் சுமார் 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை வனத்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அனைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“