scorecardresearch

திடீரென வெடித்த தீ அணைக்கும் சிலிண்டர் : விபத்தில் சிக்கிய இளைஞர்

அப்போது அழுத்தத்தின் காரணமாக சிலிண்டரில் இருந்த வாயு, சிலிண்டருடன் 50 அடி தூரத்துக்கு பறந்து எதிர் சாலையில் வந்த வாகன ஓட்டுநரின் கால் மீது விழுந்து விபத்து

திடீரென வெடித்த தீ அணைக்கும் சிலிண்டர்
திடீரென வெடித்த தீ அணைக்கும் சிலிண்டர்

தீயணைக்கும் கருவியான Co2 வகை தீயணைக்கும் சிலிண்டர்   எடைக்கு போட எடுத்து வந்தவர் கவனக்குறைவாக அதன் மேல் மூடியை திறக்க முயன்றுள்ளார்.

அப்போது அழுத்தத்தின் காரணமாக சிலிண்டரில் இருந்த வாயு, சிலிண்டருடன் 50 அடி தூரத்துக்கு பறந்து எதிர் சாலையில் வந்த வாகன ஓட்டுநரின் கால் மீது விழுந்து விபத்து

பழைய இரும்பு கடையில் வைத்திருந்த தீ அணைப்பான் உருளை வெடித்து. சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் கால் முறிந்தது.

கோவை குணியமுத்தூர் தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் சேலத்தை சேர்ந்த அருண் என்ற மாணவன்.  குனியமுத்தூர் இருந்து பாலக்காடு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த போது. சாலையின் வலது புறத்தில் குமார் என்பவரின் பழைய  இரும்பு கடையில் தீயணைக்கும் கருவியான Co2 வகை தீயணைக்கும் சிலிண்டர்  எடைக்கு போட எடுத்து வந்தவர் கவனக்குறைவாக அதன் மேல் மூடியை திறக்க முயன்றுள்ளார்.

அப்போது அழுத்தத்தின் காரணமாக சிலிண்டரில் இருந்த வாயு, சிலிண்டருடன் 50 அடி தூரத்துக்கு பறந்து எதிர் சாலையில் வந்த அருண் என்பவரின்   கால் மீது விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Fire controlling cylinder blast youngster met with accident